மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
அசாம்: 2023 ஆண்டு முதல் 21 தீவிரவாதிகள் கைது!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 21 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சிறப்பு காவல் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 2024 டிசம்பர் 31 வரையிலான காலத்தில் 21 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. ஹர்மீத் சிங் கூறுகையில், கடந்த 2023 முதல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட 21 தீவிரவாதிகளில் 16 பேர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் மற்றவர்கள் மாவோயிஸ்டு மற்றும் உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.
அவர்களிடமிருந்து, நவீன ரகத் துப்பாக்கிகள் மற்றும் மிகவும் அபாயமான நவீன வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு!
இதனைத் தொடர்ந்து, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் கடந்த ஒன்றரை வருடத்தில், 59.41 கிலோ ஹெராயின், 3999.68 கிலோ அளவிலாப கஞ்சா மற்றும் 37,000 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட பல போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் 1.10 கிலோ சுத்தத் தங்கம், காண்டாமிருக கொம்புகள் 2 மற்றும் 15 கால்கள், 14 யானைத் தந்தங்கள், 2 புலி பல் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சிறப்புக் காவல் அதிரடிப் படை மேற்கொண்ட 234 நடவடிக்கைகளில் 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின்போது 134 வாகனங்கள் மற்றும் 361 செல்போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.