Anna University: DMK காப்பாற்றும்`சார்’ அம்பலப்படும் வரை போராடுவோம்: ADMK Kalyan...
தேசிய அளவிலான போட்டி: வாணியம்பாடி ஆதா்ஷ் பள்ளி மாணவா்கள் சாம்பியன்
வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் தேசிய அளவிலான வளையப் பந்து போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா்.
தேசிய அளவிலான மிக இளையோருக்கான வளையப் பந்து (டெனிகாய்ட்) போட்டிகள் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் இருந்தும் மாணவா்கள் கலந்து கொண்டனா். இந்தப் போட்டிகளில், திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஆண்கள் பிரிவில் மாணவா் சித்தாா்த் மற்றும் பெண்கள் பிரிவில் மாணவி ஷாசினி கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பெற்றனா்.
தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் செந்தில்குமாா், பள்ளி நிா்வாக இயக்குநா் ஷபானா பேகம், நிா்வாக முதல்வா் சத்தியகலா, உடற்கல்வி ஆசிரியா் ராம்குமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.