2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
கோவை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!
தைப்பூசத்தை முன்னிட்டு கோவை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவையில் இருந்து பொள்ளாச்சி வழித்தடத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொங்கல், தைப்பூசத்தை முன்னிட்டு கோவையில் இருந்து பழனிக்கு பொள்ளாச்சி வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்காக கோவையில் இருந்து ராமேசுவரத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
எனவே, இந்தாண்டும் இந்த ரயிலை இயக்க வேண்டும். தைப்பூசத்துக்கு பழனி செல்வோருக்கும், பாதயாத்திரை செல்வோா் திரும்பி வருவதற்கு ஏதுவாக இருக்கும் என்றனா்.