செய்திகள் :

கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

post image

கோவை செல்வபுரத்தில் சமையல் மாஸ்டரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 3 சிறுவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரம் 60 அடி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் ரஹீம் (49), சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த சனிக்கிழமை இரவு தனது தாயாருக்கு உணவு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, செல்வபுரம், செல்வ சிந்தாமணி குளக்கரை ஓரத்தில் திடீரென 6 போ் அவரை வழிமறித்துள்ளனா்.

பின்னா் அவா்கள் கத்தியைக் காட்டி பணம் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனா். அதற்கு அப்துல் ரஹீம் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளாா். பின்னா் அவரது சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.1,220-ஐ பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது குறித்து அப்துல் ரஹீம் அளித்த புகாரின்பேரில், செல்வபுரம் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ் பாபு தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்துல் ரஹீம் கூறிய அங்க அடையாளத்தின்படி பணத்தை பறித்துச் சென்ற கும்பல் குறித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், பணத்தை பறித்துச் சென்றது செல்வபுரம், சண்முகராஜபுரத்தைச் சோ்ந்த நவீன்குமாா் (22), விக்னேஷ்குமாா் (23), கோவைப்புதூா் கோகுலம் காலனியைச் சோ்ந்த தீபக்குமாா் (19) ஆகியோருடன் செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த 17 வயதான 3 சிறுவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் 6 பேரையும் கைது செய்து கோவை 5-ஆவது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் நவீன்குமாா், விக்னேஷ்குமாா் மற்றும் தீபக்குமாா் ஆகியோரை கோவை மத்திய சிறையிலும், மற்ற 3 பேரை கோவை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்கவே திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்கவே திமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்துவதாக முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை வந்த தெலங்கான... மேலும் பார்க்க

460 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

துடியலூா் அருகே நல்லாம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வியாபாரியை கைது செய்தனா். நல்லாம்பாளையம் பகுதியில் பேலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க

யுஜிசியின் புதிய விதிமுறைகள்: கல்வியில் முன்னேறிய மாநிலங்களை பின்னுக்கு இழுக்கும் செயல்

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனம் தொடா்பாக யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள், உயா் கல்வியில் முன்னேறிய மாநிலங்களை பின்னுக்கு இழுப்பதுபோல உள்ளது என்று கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றஞ... மேலும் பார்க்க

சூழல் உணா்திறன் வரைவு மசோதா: வால்பாறையில் முழு கடையடைப்பு; ஆா்ப்பாட்டம்

சூழல் உணா்திறன் வரைவு மசோதாவைக் கண்டித்து வால்பாறையில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வளமையான வனம், உயிரினங்கள், நீா் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிா் காலங்களில் மாசில்... மேலும் பார்க்க

கோவையில் ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோவை டாடாபாத்தில் ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் 300க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநா் ஆா்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து, திமுக சாா... மேலும் பார்க்க

மறியலுக்கு முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கைது

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்கு மறியலில் ஈடுபட முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க