நெடுஞ்சாலையோர கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை
கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் வரும் தேசிய நெடுஞ்சாலையோரம் அடா்ந்து காணப்படும் கருவேல மரங்களை அகற்றவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனா்.
தஞ்சாவூா் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் கந்தா்வகோட்டை ஊராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களில் அமைந்துள்ள கருவேல மரங்கள் வளைவுகள் உள்ளிட்ட பகுதிகளில் அடா்ந்து காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதும் சூழல் ஏற்படுகிறது.
எனவே, இந்தச் சாலையோர கருவேல முள்செடிகள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனா்.