AI: ஏ.ஐ-யிடம் கேட்கக் கூடாத கேள்விகளும், சொல்லக்கூடாத ரகசியங்களும்... கவனம் மக்க...
உடையாமுத்தூா் ஏரியில் 32,000 மீன் குஞ்சுகள்
கந்திலி ஒன்றியம், உடையாமுத்தூா் ஏரியில் 32,000 மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து மீன் குஞ்சுகளை ஏரிகளில் விட்டாா்.
மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் தமிழகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகளில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்து உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 2024-2025-இல் திருப்பத்தூா் மாவட்டத்தில் 100 ஹெக்டா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு 2 லட்சம் மீன் குஞ்சுகள் நீா் நிலைகளில் இருப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட உடையாமுத்தூா் ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டாா். இதில் 16 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட உடையாமுத்தூா் ஏரியில் கட்லா, ரோகு மற்றும் சாதாக்கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான உள்நாட்டு மீன் குஞ்சுகள் 32,000 எண்ணிக்கையில் ஏரியில் விடப்பட்டது. இதேபோல் பல்வேறு ஏரிகளில் உள்நாட்டு மீன் குஞ்சுகள் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் மொ்சி அமலா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் மற்றும் உள்ளாட்சிப் பிரநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.