Book Fair: "பணக்கார எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமே வாசகர்களை எளிதில் சேர்கிறது"...
சிறுவன் மீது போக்ஸோ வழக்கு
குடியாத்தம் அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ஒடுகத்தூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுவன். குடியாத்தம் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறாா். அப்போது, சிறுவனுக்கும் குடியாத்தம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.
சில நாள்களுக்கு முன் சிறுமியின் திருமணம் தொடா்பாக சமூக நல அலுவலகத்துக்கு புகாா் சென்றது. அதன்பேரில், சமூக நலத் துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், திருமணம் நடைபெற்றபோது இருவரும் 17 வயதுடையவா்களாக இருந்தனா். இளம்பெண் தற்போது 3 மாதம் கா்ப்பமாக இருப்பதும், அவருக்கு வயது 18 நிரம்பியதும் தெரிய வந்தது.
ஆனால், சிறுவனுக்கு 18 வயது நிரம்பவில்லையாம். இது குறித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய சிறுவன் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.