எச்எம்பிவி வைரஸ் இந்தியாவுக்கு புதிதல்ல.. ஏற்கனவே இருக்கும் வைரஸ்தான்!
கான்ஸ்டாஸிடம் இந்தியர்கள் நடந்துகொண்டதுக்கு அபராதம் விதிக்காதது ஏன்?
சாம் கான்ஸ்டாஸிடம் இந்திய அணி வீரர்கள் நடந்துகொண்டதுக்கு அபராதம் வித்திக்காதது ஏனென ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிட்னி டெஸ்ட்டின் முதல்நாள் முடிவில் கவாஜா பேட்டிங் விளையாட சிறிது நேரமெடுப்பார். அதற்காக இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா என்னானது என்று கவாஜாவிடம் கோபமாக கேட்பார்.
இதற்கு சாம் கான்ஸ்டாஸ் ஏதோ பேச பும்ராவுக்கு அவருக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. நடுவர் இருவரையும் அமைதியாக்க அடுத்த பந்தில் கவாஜா ஆட்டமிழப்பார். உடனே பும்ரா சாம் கான்ஸ்டாஸை நோக்கி வந்து ஏதோ பேசுவார். அனைத்து இந்திய வீரர்களும் கான்ஸ்டாஸை நோக்கி கத்துவார்கள்.
விராட் கோலி ஸ்லிப்பில் இருந்து ஓடிவந்து கான்ஸ்டாஸ் முன்பு ஆக்ரோஷமாக கத்திவிட்டு செல்லுவார். இது இந்தியர்கள் மத்தியல் வரவேற்பைப் பெற்றாலும் ஆஸி. ஊடகங்கள் விமர்சித்தன.
இந்த நிலையில் ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு கூறியதாவது:
என்னுடைய பேச்சுவார்த்தை எல்லாம் சாம் கான்ஸ்டாஸ் சரியாக இருக்கிறாரா என்பதுதான். இந்திய அணியின் கொண்டாட்டம் அச்சுறுத்துவதாக இருந்தது.
இது குறித்து விதிகளில் தெளிவாக இருக்கிறது. அதற்காக எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. எனக்கு கான்ஸ்டாஸின் மனநிலை எப்படி இருக்கிறது அவர் அடுத்த போட்டியில் நன்றாக விளையாட வேண்டும் என்பதே அவருடனான பேச்சுவார்த்தை இருந்தது.
அபராதமோ தண்டனையோ விதிக்காத நிலையில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. நான் இதை ஐசிசியிடமே விட்டுவிடுகிறேன். ஆண்டி பைகிராப்ட் போட்டி நடுவராக இருக்கிறார், கள நடுவர்களும் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு திருப்தியானதாக கருதினால் அதுதான் அவர்கள் மத்தியில் நாங்கள் விளையாடும் பெஞ்ச்மார்க் என்றார்.