145 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் முத்துநகர் விரைவு ரயில்: தெற்கு ரயில்வே
சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் அதிவேக விரைவு ரயில் தனது ஓட்டத்தைத் தொடங்கியது இதே புத்தாண்டு நாளில்தான். தற்போது 145 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளது.
1880ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளில், சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடிக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கிய முத்துநகர் விரைவு ரயில், தொடர்ந்து 145 ஆண்டுகள் தனது இயக்கத்தை நிறைவு செய்திருக்கிறது.
தமிழகத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு மக்களைக் கொண்டு சென்றதோடு, பல்வேறு வகையான மக்களை இணைத்தப் பெருமையையும் கொண்டுள்ளது. சென்னையிலிருந்து 11 மணி நேரம் பயணித்து தூத்துக்குடி சென்றடையும்.
இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களையும் இணைத்துள்ளது. சுமார் 17 நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயிலில் 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்பட 21 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.