3 நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
புத்தாண்டு தொடங்கி முதல் மூன்று நாள்கள் தங்கத்தின் விலை ஏற்றமடைந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
இன்று(சனிக்கிழமை) காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ.57,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ரூ. 45 குறைந்த நிலையில் இன்று ரூ. 7,215-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க | நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
நேற்று தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 58,000-யைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ. 99-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.