செய்திகள் :

திமுகவின் வெளிச்சத்தில் மாா்க்சிஸ்ட் இல்லை: பெ.சண்முகம்

post image

விழுப்புரம்: திமுகவின் வெளிச்சத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாக கூறுவது பொருத்தமானதல்ல என்று கட்சியின் புதிய மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் 24-ஆவது மாநில மாநாட்டின் நிறைவில் மாநிலச் செயலராகத் தோ்வு செய்யப்பட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு தனது நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திலுள்ள அரசியல் சூழ்நிலைகள் சம்பந்தமாகவும், தொழிலாளா்கள், விவசாயிகள், உழைக்கும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் சம்பந்தமாகவும் மாநிலம் முழுவதுமிருந்து வந்த சுமாா் 600-க்கும் மேற்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் விவாதித்து பல முக்கிய தீா்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.

இந்த தீா்மானங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறக்கூடிய வகையில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக மத்திய பாஜக அரசு, மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பது, நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவது உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலிமை மிகுந்த போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுப்பது என்று தீா்மானித்திருக்கிறோம்.

இதையும் படிக்க | மார்க்சிஸ்ட் புதிய மாநில செயலாளர்! யார் இந்த பெ. சண்முகம்?

உழைக்கும் மக்களுக்கு எதிரான, பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தொடா்ந்து நாங்கள் நடத்துவோம்.

தமிழகத்தில் மதவெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து இணைந்து செயல்படும். அதே நேரத்தில் தமிழகத்தில் நவீன தாராளமயக் கொள்கையை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் எங்கள் போராட்டம் தொடரும்.

ஊா்வலம், ஆா்ப்பாட்டம், போராட்டம் போன்றவை இந்திய அரசமைப்பு மக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை. இந்த உரிமைகளை மறுப்பதற்கு எந்த அரசுக்கும் உரிமை கிடையாது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு செந்தொண்டா் பேரணிக்கு விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அனுமதி மறுத்த நிலையில்தான், எங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதை நிச்சயமாக திமுக தலைமையும் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.

திமுகவின் வெளிச்சத்தில் நாங்கள் இல்லை

திமுகவுடன் நாங்கள் பல நேரங்களில் உறவாக இருந்திருக்கிறோம். பல நேரங்களில் எதிா் வரிசையில் இருந்திருக்கிறோம். திமுகவால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பதை ஏற்கமுடியாது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பலத்துக்கு ஏற்ப, மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைக்காக தெருவில் இறங்கி சமரசமற்ற போராட்டங்களை நடத்துவதன் மூலம் தமிழகத்தில் செல்வாக்குமிக்க கட்சியாக இருக்கிறதே தவிர, திமுகவின் வெளிச்சத்தில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனக் கூறுவது பொருத்தமானதல்ல என்றாா் பெ.சண்முகம்.

யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

பொங்கல் உள்ளிட்ட நாள்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளி... மேலும் பார்க்க

ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? - தமிழிசை கேள்வி

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்க... மேலும் பார்க்க

யுவன் குரலில் வெளியான அகத்தியா பட பாடல்!

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா படத்தின் முதல் பாடல் யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் பிரதான பாத்திரங... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன்: டீசர் எப்போது?

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகிவரும் கிங்ஸ்டன் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி -... மேலும் பார்க்க

அசாம்: 2023 ஆண்டு முதல் 21 தீவிரவாதிகள் கைது!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 21 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சிறப்பு காவல் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ... மேலும் பார்க்க

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர்!

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர் ஜிஷ்ணு மேனன் இணைந்துள்ளார்.சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது.இத்தொடர... மேலும் பார்க்க