கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்!
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று (ஜன.6) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
அம்மாநிலத்தின் பல்கார் மாவட்டத்தின் தாஹானு தாலுக்காவில் இன்று (ஜன.6) அதிகாலை 4.35 மணியளவில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை உயர் அதிகாரி விவேகானந்த் கடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தினால் எந்தவொரு உயிர்சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வமாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:மோசமான வானிலையால் 60 விமானங்கள் தாமதம்!
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை அம்மாவட்டத்தின் போர்டி, டப்சாரி மற்றும் தலசாரி பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2025 ஜனவரி 1 வரையிலான காலக்கட்டத்தில் 4 முறை 3 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.