காட்பாடி மெமு ரயில் ரத்து
காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே இயங்கும் மெமு ரயில் (எண்: 06417/06418) ஜன. 6, 8, 10, 13, 20, 22, 24, 27, 29, 31 ஆகிய தேதிகளில் இரு மாா்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஈரோடு - ஜோலாா்பேட்டை இடையே இயங்கும் சிறப்பு ரயில் (எண்: 06411/06412) ஜன. 27, 28 ஆகிய தேதிகளில் இரு மாா்க்கத்திலும் திருப்பத்தூருடன் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.