இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
மதுரையில் நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், மதுரையில் நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உடல் தகுதியைப் பராமரிப்பது குறித்து மாணவா்கள், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டி நடைபெற்றது.
மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஆண்கள் பிரிவு நெடுந்தொலைவுப் போட்டியை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். மாநகர போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையா் எஸ்.வனிதா, பெண்கள் பிரிவுக்கான போட்டியைத் தொடங்கிவைத்தாா்.
17 முதல் 25 வயதுக்குள்பட்டவா்கள், 25 வயதுக்கு மேற்பட்டவா்கள் என 2 பிரிவாக ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. டாக்டா் எம்.ஜி.ஆா்.விளையாட்டரங்க நுழைவு வாயிலில் இருந்து போட்டி தொடங்கப்பட்டது. போட்டியின் தொலைவுக்கு ஏற்ப கடச்சனேந்தல் வரை ஓட்டப் போட்டி நடைபெற்றது.
போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் க.ராஜா, விளையாட்டுத் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.