தில்லி தேர்தலுக்கான பிரசாரப் பாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி!
தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரப் பாடலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கேஜரிவால், தில்லி முதல்வர் அதிஷி, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பிற மூத்த உறுப்பினர்கள் உள்பட முக்கிய ஆம் ஆத்மி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பிர் லேயேங்கே கேஜரிவால்....என்ற இப்பாடல் மீண்டும் கேஜரிவாலை கொண்டு வருவோம் என்று தொடங்குகிறது. இப்பாடல் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான சமீபத்தில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள், தில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ. 2,100 வழங்கும் முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சையை உறுதி செய்யும் சஞ்சீவனி யோஜனா உள்பட இந்த பாட்டின் வரிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.
பாடலை வெளியிட்ட கேஜரிவால் பேரவைத் தேரதல் தில்லி மக்களுக்கு ஒரு பண்டிகையாகும் என்றார். ஆம் ஆத்மியின் பிரசாரப் பாடல்களுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.