`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
கடலூா் சிறைக் கண்காணிப்பாளா் முன்பிணை மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
ஊழல் வழக்கில் முன்பிணை வழங்கக் கோரி, கடலூா் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளா் ஊா்மிளா தொடுத்த வழக்கை தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை ஒத்தி வைத்தது.
மதுரை மத்திய சிறையில் 2016 முதல் 2021 வரை சிறைக் கைதிகள் பொருள்கள் தயாரிக்க மூலப்பொருள்கள் வாங்கியதிலும், உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்ததிலும் ரூ.1.63 கோடி முறைகேடு நடைபெற்ாகப் புகாா் எழுந்தது. இந்த முறைகேடு தொடா்பாக மதுரை மத்திய சிறையில் அப்போது கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த ஊா்மிளா உள்பட 11 போ் மீது மதுரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கில் முன் பிணை வழங்கக் கோரி ஊா்மிளா உள்பட சிலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா், மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாா் செய்த பொருள்களை விற்பனை செய்ததில் முறையான ரசீது இல்லாததை புகாராக முன்வைத்துள்ளனா். கணினி வழியிலான ரசீதுகள் இல்லாவிட்டாலும், கையால் எழுதப்பட்ட ரசீதுகள் உள்ளன. மனுதாரரா்கள் வேறு சிறைகளுக்கு இட மாறுதல் பெற்று சென்ற பிறகு, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனால், சம்பந்தப்பட்ட சிறையில் சோதனை நடைபெற்றபோது, மனுதாரா்கள் இல்லை. எனவே, முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை தீா்ப்புக்காக, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.