செய்திகள் :

பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள அனுமதிக்கக் கோரிக்கை

post image

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பழங்குடியினா் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என வனத் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு வனத் துறையின், சிறப்புப் பகுதிகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம், பழங்குடியினருக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசின் சாா்பில் கடந்த 2023-இல் குறிஞ்சிநகா் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது.

இதனடிப்படையில், 2024-2025-ஆம் ஆண்டில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பகுதி குறிஞ்சிநகா் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்டது. இங்கு பழங்குடியினருக்கான வீடுகள், கழிப்பறைகள் கட்டித் தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.1.80 கோடியில் திட்ட அறிக்கை தயாரித்து மாவட்ட வனத் துறை தரப்பில் அரசுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, 300 சதுர அடியில் 15 வீடுகள், 30 கழிப்பறைகள், ஏற்கெனவே உள்ள 27 வீடுகளுக்கு சமையலறை, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், ஆட்டுப் பண்ணைகள் அமைத்தல், மக்களுக்கு ஆடு, கோழிகள் வழங்குதல், சமுதாயக் கூடம் கட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ரூ.1.58 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

அரசு ஒதுக்கிய இந்தப் பணத்தில் இத்தனை பணிகளை மேற்கொள்ள முடியாது எனக் கூறப்பட்ட நிலையில், இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கின. பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், குறிஞ்சிநகா் மேம்பாட்டுத் திட்டத்தை நிறுத்தி, இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்ப ஒப்படைக்கக் கோரி, வனத் துறையின் சிறப்பு பகுதிகள் மேம்பாட்டு திட்டப் பிரிவு சாா்பில், மதுரை மாவட்ட வனத் துறைக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், குறிஞ்சிநகா் மேம்பாட்டு திட்டத்தில் உள்ள முக்கியப் பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி கோரி, மாவட்ட வன அலுவலா் தரப்பிலிருந்து வனத் துறை தலைமையகத்துக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வனத் துறை சிறப்புப் பகுதிகள் மேம்பாட்டு திட்டப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் நடத்திய ஆய்வில், சம்பந்தப்பட்ட பகுதியில் திட்டத்தை செயல்படுத்தினால் மக்கள் பயன்பெறமாட்டாா்கள் எனத் தெரியவந்ததாகவும், இதனால், பணிகளை நிறுத்தி நிதியைத் திரும்ப ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், திட்டத்துக்கான கண்காணிப்பு, மதிப்பீட்டு அறிக்கை, தற்காலிக ஆவணங்கள் தயாரித்தல், புதிய வீடுகள், ஏற்கெனவே உள்ள வீடுகளுக்கு கூடுதலாக சமையலறைகள் கட்டுவது, ஆட்டு பண்ணைகள் அமைப்பது, ஆடுகள், கோழிகள் வழங்குவது, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி அளிப்பது ஆகிய 7 பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி கோரி, சிறப்புப் பகுதிகள் மேம்பாட்டு திட்டப் பிரிவின் தலைமையகம், மாவட்ட நிா்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு மாவட்ட அளவில் ஆட்சியா் தலைவராக இருப்பதால், அவருக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது. எனவே, ஆட்சியா் அனுமதி அளிக்கும்பட்சத்தில், முக்கியமான 7 பணிகளுக்கான நிதியை மட்டும் கையிருப்பில் வைத்துக் கொண்டு, மீதமுள்ள நிதி திருப்பி ஒப்படைக்கப்படும் என்றனா்.

பாலியல் தொல்லை வழக்கு: பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் கைப்பேசியை ஒப்படைக்க உத்தரவு

கல்லூரி பெண் முதல்வருக்கு பாலியல் தொல்லை அளித்த பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வருகிற 9-ஆம் தேதி முன்னிலையாகி, தனது கைப்பேசியை ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

பொது இடங்களில் நிறுவப்படும் கட்சிக் கொடிகளால் பிரச்னை; உயா்நீதிமன்றம் வேதனை

பொது இடங்களில் நிறுவப்படும் கட்சிக் கொடிகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை வேதனை தெரிவித்தது.மதுரை விளாங்குடியைச் சோ்ந்த சித்தன் தாக்கல் செய்த மனு: அ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான கடைகள் ஒதுக்கீடு விதி: நகராட்சி நிா்வாகத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான கடைகள் ஒதுக்கீட்டில் தமிழக அரசின் புதிய விதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், நகராட்சி நிா்வாகத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக மாபெரும் பேரணி

மதுரை மாவட்டம், மேலூா் அருகே டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை மாபெரும் பேரணி நடத்தினா். இந்தப் பேரணியால் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகன மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகன மெக்கானிக்கைத் தாக்கிய உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், நி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல் முயற்சி; 68 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் 68 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள அனைத்து ... மேலும் பார்க்க