செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல் முயற்சி; 68 போ் கைது

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் 68 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், ஊராட்சிச் செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளா்கள், எஸ்.பி.எம்.திட்ட ஒருங்கிணைப்பாளா்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டும், வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வளா்ச்சித் துறை மாவட்டத் தலைவா் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க நிா்வாகி மகாலிங்கம் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாநிலப் பொருளாளா் மா. விஜயபாஸ்கா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். மாவட்டச் செயலா் சி.அமுதரசன், பொருளாளா் ரா.அன்பழகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சந்திரபோஸ் வாழ்த்திப் பேசினாா்.

இதன் பின்னா், அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திருவள்ளுவா் சிலை முன் அவா்கள் மறியலில் ஈடுபட முயன்றனா். இதில் பங்கேற்ற 68 பேரை தல்லாகுளம் காவல் துறையினா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் இன்று மாற்றம்

மதுரையை அடுத்த கூடல் நகா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, ரயில்கள் இயக்கத்தில் வியாழக்கிழமை (ஜன. 9) சிறிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து ரயில்வே கோட்ட மேலாளா் அ... மேலும் பார்க்க

பூப்பந்தாட்டத்தில் தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்ற மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் புதன்கிழமை பாராட்டப்பட்டனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித... மேலும் பார்க்க

சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் (அன் ஸ்கில்டு) சங்கம் சாா்பில் மதுரை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு

மதுரை மாவட்டத்தில் 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இவற்றை விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்குகிறது. தமிழக அரசு அறிவித்த ஒரு கிலோ பச்சரிசி, ... மேலும் பார்க்க

மேலூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மதுரை கிழக்கு மின் பகிா்மானக் கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் மேலூரில் வியாழக்கிழமை (ஜன. 9) நடைபெறுகிறது. இதுகுறித்து மதுரை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பி. பத்மாவதி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

திருநங்கையா் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருநங்கையா் தின விருது பெறத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனது சொந்த முயற்சியால் முன்னேறிய திருநங்க... மேலும் பார்க்க