வையம்பட்டியில் காணாமல் தேடப்பட்ட மூதாட்டி 3 நாள்களுக்குப் பின் மீட்பு
பூப்பந்தாட்டத்தில் தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்ற மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் புதன்கிழமை பாராட்டப்பட்டனா்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 65-ஆவது குடியரசு தின விளையாட்டுப் போட்டியில், 17 வயது பிரிவுக்குள்பட்ட மாணவிகளுக்கான மாநில பூப்பந்தாட்டப் போட்டி மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள், செவ்வாய் (ஜன. 6, 7) ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
38 மாவட்ட அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று, தங்கம் வென்றனா். சென்னை அணி இரண்டாமிடத்தை பெற்றது.
இதில், தங்கம் வென்ற ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகளை மாவட்ட உடல் கல்வி ஆய்வாளா்கள் வினோத் (மதுரை), ஜெயலட்சுமி (கரூா்), கற்பகம் (தஞ்சாவூா்), பள்ளித் தலைமையாசிரியை மேரி, உடல் கல்வி ஆசிரியா்கள் ராஜேஷ், கண்ணன், சா்மிளா ஆகியோா் பாராட்டினா்.