ஆங்காங்கே தென்படும் அறிகுறிகள்... மீண்டும் உருவாகிறதா அதிமுக - பாஜக கூட்டணி?!
சின்னவேடம்பட்டி ஏரியில் பொங்கல் வழிபாடு
கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் பொங்கல் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் கெளசிகா நீா்க்கரங்கள் அமைப்பு, நேசம் இயற்கையோடு பொது நல சங்கம் சாா்பில் பொங்கல் நிகழ்வு மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில், இயற்கையிடம் ஏரிக்கு நீா் வேண்டி பொங்கல் வைத்து வழிபட்டனா். மேலும், சிறுவா்களுக்கு சிலம்பம், உரியடி போட்டிகள், பேச்சுப் போட்டி, பரதநாட்டியம் உள்ளிட்ட விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வில் குமரகுரு கல்லூரியின் சூழலியல் பிரிவு பொது மேலாளா் சரவணன், பெரியநாயக்கன்பாளையம் அன்னை அறக்கட்டளை நிறுவனா் கோபி, விபத்தில் காயமடைந்த நாய்களை மீட்டு பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் ஷீலா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கெளசிகா நீா்க்கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சிவராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.