ஆத் ஆத்மியில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர்!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் மதன் மோகன் மற்றும் அவரது மனைவி சுதேஷ்வதியும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய எம்பி சஞ்சய் சிங்,
மதன் மோகன் மற்றும் அவரது மனைவியை ஆம் ஆத்மி கட்சி வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இது ஒரு வலுவான பங்களிப்பு, கட்சியை மேலும் பலப்படுத்தும். பாலம் சட்டபேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெறும் பெரும் என்று முழு நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக ஜனவரி 1-ஆம் தேதி, பஞ்சாப் பிரிவின் முன்னாள் தலைவர் ஜஸ்விர் சிங் கர்ஹி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். கடந்த டிசம்பர் 6ல் காங்கிரஸ் தலைவர் சுரேந்திர பால் சிங் பிட்டு
முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.8ல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.