இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி: 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு
நாமக்கல்லில், அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி ஆண்கள், பெண்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை காலை 6 மணியளவில் நடைபெற்றது. கோவை மண்டல முதுநிலை மேலாளா் அருணா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா முன்னிலை வகித்தாா். இப் போட்டியானது ஆட்சியா் அலுவலகம் முதல் எா்ணாபுரம் வரை நடைபெற்றது. 17 முதல் 25 வயதிற்கு உள்பட்டோா் ஆண்கள்- 8 கி.மீட்டா், பெண்கள் 5 கி.மீ தொலைவு வரை ஓடினா்.
அதேபோல் 25 வயதுக்கு மேற்பட்டோா் ஆண்கள்-10 கி.மீ, பெண்கள்-5 கி.மீ வரையில் ஓடினா். 200-க்கும் மேற்பட்டோா் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனா். முதல் மூன்று இடங்களை பெற்றோருக்கு பரிசுத் தொகையாக முறையே ரூ.5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், 4 முதல் 10 இடத்துக்குள் வந்தோருக்கு தலா ரூ.1,000, தகுதிச்சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியரால் திங்கள்கிழமை வழங்கப்படுகிறது.நிகழ்வில், கால்பந்து பயிற்சியாளா் கோகிலா, விளையாட்டுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.