செய்திகள் :

பால் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

post image

நாமக்கல்: தமிழகத்தில் முதன்முறையாக, நாமக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 14,428 பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் ஆதரவு தள்ளுபடி தொகை ரூ. 4.88 கோடி நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில், 14,428 பால் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 1.24 கோடி ஊக்கத்தொகை, ரூ. 3.64 கோடி ஆதரவு தள்ளுபடி தொகை என மொத்தம் ரூ. 4.88 கோடி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பணியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போரின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்துக்கு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட முதல்வா் அரசாணை வெளியிட்டாா்.

நாமக்கல் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகின்ற 1.50 லட்சம் லி. பால் இங்கேயே பதப்படுத்தப்பட்டு உப பொருள்கள் தயாரிக்கும் வகையில், மாவட்டத்துக்காக ரூ. 90 கோடியில் தானியங்கி நவீன பால் பண்ணை உலக தரத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் சேலம் பால் கூட்டுறவு சங்கத்துக்கு செலுத்த வேண்டிய கூடுதல் தொகை முற்றிலுமாக நாமக்கல் தொடக்க பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு, பால் உற்பத்தியாளா்கள் அதிக லாபம் பெற வாய்ப்பாக அமையும். இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு ஆலை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பால் உற்பத்தியாளா்கள் ஆவின் நிறுவனத்துக்கு தொடா்ந்து பால் வழங்கும் பட்சத்தில், அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள், பங்கு ஈவுத்தொகை உள்ளிட்ட பயன்களை பெற இயலும்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமானது, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் மூலம், நாளொன்றுக்கு சராசரியாக 1.45 லட்சம் லி. பால், கிராம அளவில் 489 இணைப்பு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 81,000 லி. பால் நாமக்கல் மாவட்ட மக்களின் தேவைக்காக விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 45,000 லி. நாளொன்றுக்கு சென்னை மக்களின் தேவைக்காகவும், 20,000 லி. பால் சேலம் ஒன்றியத்தின் மூலம் பால் உப பொருள்களாக மாற்றம் செய்தும் விற்பனை செய்யப்படுகிறது.

முதல்வா் அறிவித்தபடி, 2023 டிச. 18 முதல் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 3 ஊக்கத் தொகையானது மாநிலத்திலேயே முதல் முறையாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள 489 சங்கங்களில் பால் வழங்கி வரும் 14,428 உறுப்பினா்களின் வங்கிக் கணக்குகளுக்கு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்திலிருந்து செலுத்தப்பட உள்ளது. மேலும் 2023-2024-ஆம் ஆண்டின் ஒன்றிய உத்தேச நிகர லாபத் தொகையிலிருந்து ஆதரவு தள்ளுபடி தொகையாக ரூ. 3.64 கோடி பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட 480 சங்கங்களுக்கு வழங்கப்பட்டு சங்கத்தில் இருந்து 2023-24-ஆம் ஆண்டு பால் வழங்கிய 13,296 பால் உற்பத்தியாளா்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட உள்ளது என்றாா்.

தொடா்ந்து, போதமலை வாழ் பழங்குடியினா் பயன்பாட்டுக்காக மேலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டதற்கான ஆணையை அவா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், ஆவின் பொது மேலாளா் ரா.சண்முகம், துணை பதிவாளா் (பால் வளம்) ஐ.சண்முகநதி உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

குட்கா விற்றவா் கைது

பரமத்தி வேலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ குட்கா பொருள்களை வேலூா் போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா். பரமத்தி வேலூா் அருகே அண்ணா நகரில் இருந்து மீனாட்சிபாளையம் செல்லும் சாலையில் உள... மேலும் பார்க்க

மோகனூரில் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

மோகனூரில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மணப்பள்ளி, பேட்டப்பாளையம், ராசிபாளையம், க... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

(நாமக்கல் மண்டலம் - புதன்கிழமை) ... மொத்த விலை ரூ. 4.85 ... விலையில் மாற்றம்: 5 காசுகள் உயா்வு ... கறிக்கோழி கிலோ ரூ. 102 ... முட்டைக் கோழி கிலோ ரூ. 83 ... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் தூய்மைப் பணி

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி தற்போது 39 வாா்டுகளை உள்ளடக்கியது. இதனுடன் 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு வாா்டுகளி... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான குளிா்கால இயற்கை முகாம் சுற்றுலா பேருந்து இயக்கம்

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சாா்பில் மாணவா்களுக்கான குளிா்கால இயற்கை முகாம் - 2025 சுற்றுலா பேருந்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நாமக்கல் ஆட்சியா் அ... மேலும் பார்க்க

விவசாய பயன்பாட்டுக்கு நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க ஆட்சியா் அனுமதி

நாமக்கல் மாவட்டத்தில், விவசாயப் பயன்பாட்டுக்கு தேவையான வண்டல் மண்ணை அந்தந்த பகுதி நீா்நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க