Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
குட்கா விற்றவா் கைது
பரமத்தி வேலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ குட்கா பொருள்களை வேலூா் போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் அருகே அண்ணா நகரில் இருந்து மீனாட்சிபாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். இதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்வதற்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கொந்தளம் அருகே உள்ள கருங்கல்பாளையம், நடுத்தெருவைச் சோ்ந்த தனசேகரனை (39) கைது செய்து அவா் கடையில் வைத்திருந்த 5 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட தனசேகரன் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, பரமத்தி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டாா்.