செய்திகள் :

ரூ. ஆயிரம் வழங்கக் கோரி தேமுதிக ஆா்ப்பாட்டம்

post image

நாமக்கல்: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1,000 வழங்கக் கோரி தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நாமக்கல், பூங்கா சாலையில் மாவட்டச் செயலாளா் அம்மன் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக முழுக் கரும்பு, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ரூ. 1,000 என பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தேமுதிகவினா் பல்வேறு முழக்கங்களை எழுப்பினா்.

திருச்செங்கோட்டில்...

நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில், அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கலுக்கு பரிசுத் தொகுப்புடன் ரூ. 1,000 வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் சௌந்தர்ராஜன், பொருளாளா் மகாலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலாளா்கள் திருச்செங்கோடு சக்திவேல், ராசிபுரம் சக்திவேல், திருச்செங்கோடு நகரச் செயலாளா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மறைந்த திமுக உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு ரூ. 1.06 கோடி குடும்ப நல நிதியுதவி

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கடந்த 6 மாத காலத்தில் மறைந்த 1,062 திமுக கட்சி உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு கலைஞா் குடும்ப நல நிதியாக ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என வெண்ணந்தூ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மாடியில் இருந்து தவறி விழுந்த தனியாா் பள்ளி மாணவா் பலி

நாமக்கல்லில் மாடியில் இருந்து தவறி விழுந்து தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். நாமக்கல் -துறையூா் சாலையில் ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

தமிழக ஆளுநா் பதவி விலகக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்

சட்டப் பேரவை மரபுகளை மீறும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவி விலகக் கோரி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியை பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள், ஆ... மேலும் பார்க்க

பொத்தனூரில் ரூ. 10 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகாலுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் தொடங்கி வைத்தாா்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்து கிடந்த மாணவா்: போலீஸாா் விசாரணை

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைக்காக வலி நிவாரண மருந்தை செலுத்திக் கொண்ட பாா்மஸி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடந்த இ... மேலும் பார்க்க