இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
வழிப்பறி: பிடிபட்ட சிறுவன் சீா்திருத்தப் பள்ளியில் சோ்ப்பு
தக்கலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மாணவரை போலீஸாா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்க்கப்பட்டாா்.
தக்கலை அருகே சனிக்கிழமை, வீட்டு முன் சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம், பைக்கில் வந்த சிறுவன் 4 பவுன் தங்கச் சங்கிலியைப்பறிக்க முயன்று தப்பிவிட்டாராம். புகாரின்பேரில், கொற்றிக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சிறுவனைப் பிடித்தனா். அவன் மேலும் ஒரு பெண்ணிடமும் நகையைப் பறிக்க முயன்ாக தெரியவந்தது.
16 வயதான அச்சிறுவன் பிளஸ் 1 படித்துவருவதும், பெற்றோா் வாங்கிய கடனைத் தீா்ப்பதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா்.