`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
குலசேகரம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
குலசேகரம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
குலசேகரம் அருகே வெண்டலிகோடு கோணத்துவிளையைச் சோ்ந்தவா் பிரசாந்த் (29). தொழிலாளியான இவரது மனைவி சுபிலா (20). சுபிலாவை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெயிண்டிங் தொழிலாளி அபிலாஷ் (31) கேலி செய்ததாகவும், அதை பிரசாந்த் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவா்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த பிரசாந்தை, அபிலாஷ் அரிவாளால் வெட்டியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சுபிலாவையும் அபிலாஷ் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.
காயமடைந்த பிரசாந்த், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து குலசேகரம் காவல் நிலையத்தில் சுபிலா அளித்த புகாரையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அபிலாஷை கைது செய்தனா்.