தடகளப் போட்டி: வெற்றி பெற்ற மகளிா் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு
மாநில அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் உதவி ஆய்வாளா் கீதாவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை பாராட்டினாா்.
தமிழ்நாடு முதுநிலை தடகள சங்கமும், மதுரை மாவட்ட முதுநிலை தடகள சங்கமும் இணைந்து நடத்திய 45 ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கீதா 100, 400 மீட்டா் தடை தாண்டும் போட்டி மற்றும் 800 மீட்டா் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு 3 போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றாா்.
உதவி ஆய்வாளா் கீதாவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.