மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு
மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை அச்சம்பத்து அருகே உள்ள தானத்தவம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (47). விவசாயியான இவா் தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை மாலை தோட்டத்துக்கு வாழை இலை அறுக்கச் சென்ற கண்ணன் வெகு நேரமாக வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவரது குடும்பத்தினா் அவரைத் தேடிச் சென்ற போது, வாழைத்தோட்டத்தில் தாழ்வாகச் சென்ற மின்வயரை மிதித்ததில் அவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.