செய்திகள் :

ரோஹித் சர்மா, விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல; யுவராஜ் சிங் ஆதரவு!

post image

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பினை இந்திய அணி இழந்தது.

இந்தத் தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதையும் படிக்க: ஆஸி.யை வீழ்த்தும் வழி எங்களுக்குத் தெரியும்: ககிசோ ரபாடா

ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஆதரவு

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்ததைக் காட்டிலும், சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததையே மிகப் பெரிய ஏமாற்றமாகக் கூறுவேன். ஏனெனில், சொந்த மண்ணில் 3-0 என என தொடரை முழுமையாக இழந்தோம். அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பார்டர் - கவாஸ்கர் தொடரை இழந்ததை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில், ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை நாம் தொடரை வென்றுள்ளோம். இந்த முறை தோல்வியடைந்துள்ளோம். கடந்த பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதையும் படிக்க: ரோஹித், கோலி எதிர்காலம் அணித் தேர்வர்கள் கையில் இருக்கிறது: இந்திய முன்னாள் கேப்டன்!

நமது இந்திய அணியின் மிகச் சிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து நாம் பேசுகிறோம். அவர்களைப் பற்றி மிகவும் மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறோம். கடந்த காலங்களில் அவர்கள் என்ன சாதனைகள் செய்தார்கள் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவர்கள் இருவரும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள். நாம் தோற்றுவிட்டோம். அவர்கள் சரியாக விளையாடவில்லை. அவர்கள் சரியாக விளையாடாதது நம்மைக் காட்டிலும் அவர்களுக்கு மிகுந்த காயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ரோஹித் சர்மா மிகச் சிறந்த கேப்டன் என நினைக்கிறேன். வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் அவர் எப்போதும் மிகச் சிறந்த கேப்டனாக இருப்பார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது. அவரது தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அவரது தலைமையின் கீழ் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!

என்னைப் பொருத்தவரையில், வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அவர்களைப் பற்றி எளிதில் மோசமாக விமர்சித்து விடலாம். ஆனால், அவர்களுக்கு ஆதரவாக பேசுவது மிகவும் கடினம். அவர்களைப் பற்றி மோசமாக பேசுவது ஊடகங்களின் வேலை. எனது நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் ஆதரவாக பேசுவது எனது வேலை. அவர்கள் இருவரும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.

ஐசிசி தரவரிசை: ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேறி டாப் 10 வரிசைக்குள் நுழைந்துள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸி. வீரர் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக களமிறங்கிய ஸ்காட் போலண... மேலும் பார்க்க

74 ஆண்டுகளுக்குப் பின்.. புதிய சாதனை படைப்பாரா தென்னாப்பிரிக்க கேப்டன்?

தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா 74 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வ... மேலும் பார்க்க

அணி வீரர்கள் காயம்: மாற்று வீரராக களமிறங்கிய உதவிப் பயிற்சியாளர்!

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற டி20 போட்டியான பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் வீரர்கள் பலர் காயத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதனால், அணியில் ஆள் பற்றாக்குறையால் அணியின் உதவிப் பயிற்சியா... மேலும் பார்க்க

தொடரை வெல்லுமா நியூசிலாந்து: இலங்கைக்கு 256 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியில் 256 ரன்கள் இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இந்தத்... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்; அரசியல்வாதிகள் வலியுறுத்தல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேத... மேலும் பார்க்க

இளைஞர்களின் கனவு நனவானது: டி10 டென்னிஸ் லீக் குறித்து யுவராஜ் சிங்!

டி10 டென்னிஸ் லீக் குறித்து முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.டிபிசிபிஎல் (டென்னிஸ் பந்து கிரிக்கெட் பிரிமீயர் லீக்) இந்தப் போட்டிகளை இந்தியாவின் 50 நகரங்களில் நடத்த திட்டம... மேலும் பார்க்க