செய்திகள் :

கேள்வி கேட்ட பத்திரிகையாளர் சடலமாக மீட்பு!

post image

சத்தீஸ்கரில் சாலை கட்டுமானத்தில் முறைகேடுகள் நடப்பதாக கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தார் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் என்பவருடனான பேட்டியில் பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் சில நாள்களுக்கு முன்னர் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், ஜனவரி முதல் தேதியில் முகேஷை சுரேஷின் சகோதரர் ரித்தேஷ் சந்திக்குமாறு அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் முகேஷ் வீடு திரும்பாததால், அவரைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முகேஷை தேடி வந்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகேஷ், கடைசியாக சென்ற இடம் சுரேஷின் குடியிருப்புப் பகுதி எனத் தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டதில் ஒரு தண்ணீர்த் தொட்டியில் முகேஷ் சடலமாக இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரது உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர், சுரேஷின் சகோதரர் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறினர்.

சண்டீகரில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

சண்டீகரில் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. சண்டீகரின் செக்டார்-17ல் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடம் திங்கள்கிழமை காலை இடிந்து விழுந்தது. ... மேலும் பார்க்க

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி தொற்று!

பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண்டு குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று உள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

திரிபுராவில் பிப்ரவரிக்குள் மின்சார ரயில்கள் இயக்கப்படும்!

வடகிழக்கு மாநிலத்தில் முக்கிய மின்மயமாக்கல் திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதத்து‘க்குள் திரிபுராவில் மின்சாரம் மூலம் இயங்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மா... மேலும் பார்க்க

பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் கைது

பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கள்கிழமை அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெர... மேலும் பார்க்க

எந்த குடும்பத்திடமும் சிக்காத ஒரே தேசிய கட்சி பாஜக: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

எந்த ஒரு தனிப்பட்ட குடும்பத்துக்கும் சொந்தமாகாமல், தொண்டா்களால் இயக்கப்படும் ஒரே தேசிய கட்சி பாஜக மட்டுமே என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனம்: மாணவா்களுக்கு ஜகதீப் தன்கா் அறிவுரை

‘தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனமாக செயல்பட வேண்டும்’ என தேசிய மாணவா் படையைச் (என்சிசி) சோ்ந்த இளைஞா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினாா். தில்லியில் கடந்த ... மேலும் பார்க்க