கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
காதலிக்க நேரமில்லை டிரைலர் எப்போது?
காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.
நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜன. 14 ஆம் தேதி பொங்கலன்று வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: கை நடுக்கம், கண்ணீர்... விஷாலுக்கு என்ன ஆனது?
முன்னதாக ஏ. ஆர், ரஹ்மான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற, ‘என்னை இழுக்குதடி’ பாடல் வெளியாகி பெரிதாக ஹிட் அடித்தது. இரண்டாவது பாடலான, ‘லாவண்டர் நிறமே..’ மற்றும் ‘பிரேக் அப் டா’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை நாளை (ஜன. 7) வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.