கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
கடும் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!
வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 6) பங்குச்சந்தை கடும் சந்தித்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
79,281.65 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
நண்பகல் 12 மணிக்கு சென்செக்ஸ் 1,222.19 புள்ளிகள் குறைந்து 78,000.92 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 397.45 புள்ளிகள் குறைந்து 23,607.30 புள்ளிகளில் உள்ளது.
கடந்த வாரம் ஜன. 1, 2 இரு நாள்கள் பங்குச்சந்தை ஏற்றம் அடைந்த நிலையில் ஜன. 3 வெள்ளிக்கிழமை சரிவைச் சந்தித்தது, தொடர்ச்சியாக இன்றும் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
பெரும்பாலாக அனைத்து நிறுவனங்களும் சரிவைச் சந்தித்து வருகின்றன.