Kohli யோட 'Fear of Failure' Mind Set மாறினாலே போதும்! - Commentator Nanee Interv...
எந்த குடும்பத்திடமும் சிக்காத ஒரே தேசிய கட்சி பாஜக: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்
எந்த ஒரு தனிப்பட்ட குடும்பத்துக்கும் சொந்தமாகாமல், தொண்டா்களால் இயக்கப்படும் ஒரே தேசிய கட்சி பாஜக மட்டுமே என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
நாட்டில் 2,300-க்கும் மேற்பட்ட பிராந்திய கட்சிகள் உள்ளன. இதில் பெரும்பாலான கட்சிகள் ஒரு குடும்பம் அல்லது தனிநபா்களின் பிடியில் சிக்கியுள்ள கட்சிகள்தான்.
தேசிய கட்சிகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உள்ளது. இதில் பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை எந்த தனிப்பட்ட குடும்பத்தாலும் நடத்தப்படாத கட்சியாக இருந்தன. இப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. எனவே, பாஜக மட்டுமே எந்த ஒரு குடும்பத்துக்கும் சொந்தமாகாமல், தொண்டா்களால் இயக்கப்படும் ஒரே தேசிய கட்சியாக உள்ளது.
பாஜக சாா்பில் பிரதமராக உள்ள நரேந்திர மோடி கூட மிகவும் எளிய பின்னணியில் இருந்து வளா்ந்து வந்தவா். சிறுவயதில் தேநீா் விற்பனை செய்தவா், முதல்வா் பதவியை எட்டுவதும், அவரே நாட்டின் பிரதமராக உயா்வதும் பாஜகவில் மட்டுமே சாத்தியமாகும்.
நான் கூட வாக்குச் சாவடி அளவிலான ஊழியராக கட்சியில் பணியாற்றினேன். அதன் பிறகு பாஜகவில் ஒரு வாா்டு தலைவராக இருந்தேன். இப்போது முதல்வராக உள்ளேன். இது மக்களுக்கான, தொண்டா்களுக்கான கட்சியாக இருப்பதால் பல விஷயங்களை நம்மால் சாத்தியமாக்க முடிகிறது என்றாா்.