பெண்ணுக்கு பேசணும்; ஆணுக்கோ தூங்கணும்... இது என்ன கலாட்டா..? - காமத்துக்கு மரியா...
ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்!
அரசியலுக்கும், அரசியலை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கான போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என்றும் ஆத் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் தில்லியில் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜனவரி 17 கடைசி நாளாகவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ம் தேதி கடைசியாக அறிவித்துள்ளது.
இதுதொர்பாக கேஜரிவால் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
பாஜக துஷ்பிரயோகம் செய்வதாகவும், முதல்வர் வேட்பாளர் மற்றும் பிரச்னைகள் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முயல்வதாகவும் அவர் கூறினார்.
அரசியலுக்கும், அரசியல் செய்பவர்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது. தில்லி மக்கள் எங்களின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஆர்வத்துடனும் அரசியல் போரில் இறங்குவதற்கு ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் தயாராக வேண்டும். ஆம் ஆத்மி தொண்டர்கள் தான் கட்சியின் மிகப்பெரிய பலம் எனவே தேர்தல் பணிகளை முழு வீச்சுடன் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.