நடப்பாண்டு ஜிடிபி வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத அளவு சரியும்!
2024 - 25ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2023 - 24ல் (கடந்த ஆண்டு) 8.2% ஆக இருந்த நிலையில், நடப்பாண்டில் 6.4% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நான்கு ஆண்டுகளில் அதிகப்படியான வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.