செய்திகள் :

ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

post image

ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களில் ஒருவராக இந்திய வீராங்கனை ஸ்மிருந்தி மந்தனாவை ஐசிசி தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவை தவிர்த்து, இந்த விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் நான்குலுலேகோ மிலாபாவும் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்மிருதி மந்தனா

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் கடந்த மாதத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பாக செயல்பட்டார். வெளிநாட்டு தொடர்கள், சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்கள் என இரண்டிலுமே அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தடுமாற்றத்துடன் தொடங்கினாலும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் சதம் விளாசி அசத்தினார்.

இதையும் படிக்க: ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா!

சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் ஸ்மிருதி மந்தனா, தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை எடுத்தார். இந்திய அணி அந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடந்த மாதத்தில் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மிருதி மந்தனா 270 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 45 மற்றும் ஸ்டிரைக் ரேட் 91.52 ஆக உள்ளது. கடந்த மாதத்தில் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 193 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 64.33 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 59.50 ஆகவும் உள்ளது.

அன்னாபெல் சதர்லேண்ட்

டிசம்பர் மாதத்தில் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட அந்த அணியின் வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் முக்கிய காரணமாக அமைந்தார். ஆல்ரவுண்டரான அவர் இரண்டு சதங்கள் விளாசி அசத்தினார். இந்தியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் 110 ரன்கள் மற்றும் வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 105 ரன்களும் அவர் எடுத்தார்.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல; யுவராஜ் சிங் ஆதரவு!

பேட்டிங்கில் மட்டுமின்றி அன்னாபெல் பந்துவீச்சிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய அவர், 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது சிறப்பான செயல்பாடுகள் டிசம்பர் மாதத்தில் அவருக்கு இரண்டு தொடர் நாயகிகள் விருதினைப் பெற்றுத் தந்தது.

நான்குலுலேகோ மிலாபா

கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்குலுலேகோ மிலாபா சிறப்பாக செயல்பட்டு அவரது பெயரை வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெறச் செய்தார். டெஸ்ட் போட்டி ஒன்றில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் தென்னாப்பிரிக்க வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார்.

இதையும் படிக்க: ஆஸி.யை வீழ்த்தும் வழி எங்களுக்குத் தெரியும்: ககிசோ ரபாடா

இவர்கள் மூவரில் ஐசிசி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஓய்வுக்குப் பின் மார்டின் கப்டில் கூறியதென்ன? பயிற்சியாளர் ஆகிறாரா?

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்தார் மார்டின் கப்டில்!

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவ... மேலும் பார்க்க

தனியாளாகப் போராடியவர் பும்ரா..! முன்னாள் வீரர் புகழாரம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவிடம் பிஜிடி தொடரில் இந்திய அணி 1-3 எ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேறி டாப் 10 வரிசைக்குள் நுழைந்துள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸி. வீரர் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக களமிறங்கிய ஸ்காட் போலண... மேலும் பார்க்க

74 ஆண்டுகளுக்குப் பின்.. புதிய சாதனை படைப்பாரா தென்னாப்பிரிக்க கேப்டன்?

தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா 74 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வ... மேலும் பார்க்க

அணி வீரர்கள் காயம்: மாற்று வீரராக களமிறங்கிய உதவிப் பயிற்சியாளர்!

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற டி20 போட்டியான பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் வீரர்கள் பலர் காயத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதனால், அணியில் ஆள் பற்றாக்குறையால் அணியின் உதவிப் பயிற்சியா... மேலும் பார்க்க