BB Tamil 8: "அவுங்கதான் PR Team வச்சுருக்காங்க" - ஹவுஸ்மெட்ஸ் குற்றம்சாட்டும் போட்டியாளர் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 92வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து இப்போது முதல் பைனலிஸ்டாக இவர் மாறி இருக்கிறார். இதனிடையே ராணவ், மஞ்சரி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 6) வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில், "யாருக்கு பி ஆர் டிம் இருக்கிறது என நினைக்கிறீர்கள். அதைக் காரணத்தோடு சொல்ல வேண்டும்" என பிக் பாஸ் கேட்கிறார். அதற்கு அனைவரும் சௌந்தர்யாவைக் கைகாட்டுகிறார்கள். "ஃபேன் பேஜ் வைத்து எல்லாத்தையும் போட்டுக்கிட்டே இருக்கிறது சௌந்தர்யாதான்" என்று முத்து சொல்கிறார்.
அதேபோல், "புரொஜக்ஷன் இந்த வீட்டில நல்லாவே நடந்திருக்கு. பி ஆர் டிம் சௌந்தர்யாவுக்கு நல்லா வேலை பார்த்திருக்காங்கனு தெரியுது" என்று பவித்ரா சொல்கிறார். "தப்ப தாண்டி ஒரு விஷயம் பண்றா அதை க்யூட்டா பி ஆர் டிம் புரொமோட் பண்றாங்க" என்று ஜாக்குலின் சௌந்தர்யாவைக் கைக்காட்டுகிறார். "லைஃப்ல எப்படித்தான் மேலவரது என்று தெரியல" என்று சௌந்தர்யா அழுது புலம்புகிறார்.