நீலகிரியில் உறை பனி வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) இரவு நேரங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஜன.4-இல் இரவு நேரங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேவேளையில், உள்மாவட்டங்களில் ஜன.4 முதல் ஜன.6-ஆம் தேதி வரை வட வானிலை நிலவும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.4,5 தேதிகளில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.