மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.14 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 119.76 அடியில் இருந்து 119.14 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,992 கன அடியிலிருந்து 1,128 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க |தரமற்ற மருந்துகள் உற்பத்தி: 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர அனுமதி
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 92.10 டிஎம்சியாக உள்ளது.