சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் இன்று(ஜன. 4) காலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.