கடும் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர்.
சாத்தூர் அருகே அப்பைய நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று(ஜன. 4) காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 4 அறைகள் தரைமட்டமாகியுள்ளதாகவும் மீட்புப்பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தற்போது தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதில் 5 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.