செய்திகள் :

பள்ளி கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது

post image

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விக்கிரவாண்டியைச் சோ்ந்த பழனிவேல்-சிவசங்கரி தம்பதியின் மகள் லியாலட்சுமி (4). இவா், அங்குள்ள தனியாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாா்.

வழக்கம் போல் பள்ளி சென்ற சிறுமி லியா லட்சுமி, வெள்ளிக்கிழமை பிற்பகல் உணவு இடைவேளையின்போது மாணவ, மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியே சென்று விளையாடினா். பின்னா், வகுப்பறைக்கு வந்தபோது, மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை ஆசிரியை ஏஞ்சல் சரிபாா்த்தாா். அப்போது லியாலட்சுமி வகுப்பறையில் இல்லாதது தெரிய வந்தது.

மாணவ, மாணவிகள் விளையாடிய இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, கழிவுநீா்த் தொட்டியின் மேல்தகரம் உடைந்திருப்பதை ஆசிரியை பாா்த்தாா். தொடா்ந்து, அந்தப் பகுதியில் பாா்த்த போது, மாணவி லியாலட்சுமி கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்தது தெரிய வந்தது.

பள்ளி நிா்வாகத்துக்கு அவா் தகவல் தெரிவிக்கவே, அவா்கள் மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, லியாலட்சுமி ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த லியாலட்சுமியின் பெற்றோா், உறவினா்கள் பள்ளி முன் வந்து கதறியழுதனா். பள்ளியில் படிக்கும் பிற குழந்தைகளின் பெற்றோா், நிா்வாகத்தின் அலட்சியத்தால்தான் சிறுமி உயிரிழந்தாா் எனக் கூறி, முழக்கமிட்டனா்.

தொடர்ந்து விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். பின்னா், மறியல் கைவிடப்பட்டது.

தொடா்ந்து, சிறுமியின் பெற்றோரிடம் புகாா் அளிக்குமாறு கூறினா். பள்ளி நிா்வாகம் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம் உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமி உயிரிழந்தது குறித்து அறிந்து மிகுந்த மனவேதனைக்கு உள்ளானதாகவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.

இதனிடையே சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சிறுமி உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளார் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சந்தேக மரணம், நிர்வாக கவனக்குறைவு ஆகிய பிரிவுகளின் கீழ் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் விழுப்பும் மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்

துப்பாக்கி சூட்டில் இளைஞர் படுகாயம்! 2 பேர் கைது!

தெற்கு தில்லியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவரை சுட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தெற்கு தில்லியின் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த நசீர் கான் (வயது 22) என்பவரது ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று (ஜன.6) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அம்மாநிலத்தின் பல்கார் மாவட்டத்தின் தாஹானு தாலுக்காவில் இன்று (ஜன.6) அதிகாலை 4.35 மணியளவில் 3.7 ரிக்டர் அள... மேலும் பார்க்க

ஜன. 11 வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : அப்பாவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண... மேலும் பார்க்க

மோசமான வானிலையால் 60 விமானங்கள் தாமதம்!

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் மோசமான வானிலையினால் 60க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இன்று (ஜன.6) கடூம் மூடுபனியினால் மோசமான வா... மேலும் பார்க்க

மணிப்பூரில் போதை மாத்திரைகளைக் கடத்திய 2 பேர் கைது!

மணிப்பூர் மாநிலம் சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்மாவட்டத்தின் மட்டா எனும் கிராமத்திலுள்ள கூகா பகுதியில் நேற்று (ஜன.5) பாதுகாப்புப் படையினர் சோதனை... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை... ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!

சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்களை அமைத்து போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து போக்குவரத்... மேலும் பார்க்க