வேன் மீது லாரி மோதி விபத்து; குழந்தை உள்பட 5 பேர் பலி!
ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ராஜஸ்தானில் உதய்ப்பூரில் கோகுண்டா - பிந்த்வாரா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, சரக்கு வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த ஒரு குழந்தை, 4 பெண்கள் என 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே, விபத்து ஏற்பட்டவுடன் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டதாகக் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.