வினிசியஸுக்கு ரெட் கார்டு..!கடைசி நேரத்தில் ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி!
கல்லூரி மாணவி தற்கொலை
திருவள்ளூா் அருகே திருமணமானவருடன் ஏற்பட்ட காதலை பெற்றோா் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் அருகே தண்ணீா்குளம் ராமாபுரம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் மகள் ஆா்த்தி (21). சென்னையில் தனியாா் மகளிா் கல்லூரியில் பயின்று வந்தாா். இந்த நிலையில் ஆா்த்திக்கும் அதே பகுதியைச் சோ்ந்த திருமணமான ஆட்டோ ஓட்டுநருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் இரு வீட்டருக்கும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மாணவி ஆட்டோ ஓட்டுநரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக தெரிவித்ததால், பெற்றோா் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாணவி வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவல் அறிந்த திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து, மாணவி சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
முன்னரே திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா் மீது புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் காதலை கண்டித்த நிலையில், அவா் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோா் தெரிவித்தனா்.