ரஷித் கான் அபார பந்துவீச்சு; டெஸ்ட் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
திருவள்ளூரில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நுழைவு வாயில்: அமைச்சா் நாசா் திறந்து வைத்தாா்
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.6.85 லட்சத்தில் அமைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு நினைவு நுழைவு வாயிலை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6.85 லட்சத்தில் நுழைவு வாயில் அமைக்க ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்பேரில் ஒன்றிய அலுவலக வளாகம் முன்பு புதிதாக நுழைவு வாயில் அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில், அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. கிருஷ்ணசாமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், ஒன்றியக்குழு தலைவா் ஜெயசீலி ஜெயபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று நுழைவு வாயிலை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பா்கத்துல்லா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தென்னவன், இந்திரா பொன்குணசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குணசேகரன், ரவி, வட்டாட்சியா் வாசுதேவன், ஒன்றிய குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.