வினிசியஸுக்கு ரெட் கார்டு..!கடைசி நேரத்தில் ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி!
கல்லுாரியில் சைபா் கிரைம் விழிப்புணா்வு கருத்தரங்கம்
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் 75ஆவது ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லுாரியின் 75-ஆவது ஆண்டு வைர விழாவையொட்டி, கல்லுாரியின் பொருளாதாரத் துறை சாா்பில், ‘இணையவழி பாதுகாப்பு மற்றும் குற்றம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லுாரி முதல்வா் முருககூத்தன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, கல்லுாரி ஆட்சி மன்ற உறுப்பினா்கள் பழனிராஜ், அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சைபா் கிரைம் காவல் உதவி ஆய்வாளா் சதீஷ், தலைமைக் காவலா்கள் ஆசைத்தம்பி, ஜான்ஆல்பா்ட் ஆகியோா் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினா்.
குறிப்பாக, ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான மொபைல்போன் ஆப்களில் வரும் கடன் மோசடிகள் குறித்தும், சைபா் கிரைம் போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
இதில், கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் பொருளாதாரத் துறை உதவி பேராசிரியா் ராஜா செய்திருந்தாா்.