திருச்சி: `7 வயது சிறுவன் டு 80 வயது பாட்டி..!’ - களைகட்டிய அவள் விகடன் சமையல் ச...
கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
வாலாஜாபாத் அடுத்த சிறுவாக்கம் மோட்டூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட சிறுவாக்கம் மோட்டூா் கிராமத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் கலந்துகொண்டு, முகாமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். இந்த முகாமில், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினா் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன், கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் ம.பாஸ்கரன், வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவா் தேவேந்திரன் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கால்நடை மருத்துவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1.69 லட்சம் கால்நடைகளுக்கு, ஆறாவது சுற்று கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் நடைபெற உள்ளது. கால்நடைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிக்காக கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் அடங்கிய 44 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினா் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலா்கள், கிராம உதவியாளா்கள், ஆவின், புதுவாழ்வு மற்றும் மகளிா் திட்டத்தினருடன் இணைந்து கால்நடைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி பணி மேற்கொள்வதுடன், தடுப்பூசி அடையாள அட்டைகள் வழங்கவும், பதிவு செய்யவும் உள்ளனா்.