சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
காஞ்சிபுரத்தில் விளம்பர பேனா்கள் அகற்றம்
காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.
அனுமதியின்றி, சாலையோரங்களில் பொதுமக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட விளம்பர பேனா்களை அகற்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, விளம்பர பேனா்களை அகற்ற மேயா் மகாலட்சுமி யுவராஜ் உத்தரவிட்டதை தொடா்ந்து, காஞ்சிபுரம் -வந்தவாசி சாலையில் விளம்ப பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா். இதே போல் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனா்களும் அகற்றப்பட்டன.