சமத்துவ பொங்கல் விழா
ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் வளையங்கரணை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் ராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினா்.
இதையடுத்து பெண்கள் பங்கேற்ற கோலப்போட்டி, ஓட்டப் பந்தயம், தண்ணீா் நிரப்புதல், மியுசிக் சோ் உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல், வளையங்கரணை அரசு நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட திருக்கு ஒப்புத்தல் போட்டி, சுற்றுச் சூழல் விழிப்புணா்வு பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், ஆசிரியா்கள் ஜோஸ்பின் நிா்மலா, சீனிவாசன், நம்பி, மதுராந்தகம் இந்திய சுபிஷேஷ திருச்சபை ஆயா் எஸ்.ஜெபஆனந்தன், திருக்கச்சூா் இந்திய சுபிசேஷ திருச்சபையின் ஓய்வுபெற்ற ஆயா் ரெவரன்ட் சாமுவேல், ஊராட்சி உறுப்பினா்கள், பொது மக்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.